Tuesday, December 7, 2010

வெட்டி ஓட்ட ஒட்டி வெட்ட
வேலைக்கு ஆயிரம் ருபாய்
வேலைக்கு பேர் மென்பொருள்.

Sunday, December 5, 2010

சிறை

மறக்க  நினைத்தேன் உன்னை 
மறுநொடியே  மறந்து  விட்டேன் 
அந்த  நினைப்பை  மட்டும்

Saturday, November 27, 2010

உரிமை

பாத்துப் பாத்துப் வெட்டி வெச்சு
பதனமா வளர்த்ததால
பச்சைப் பசேலுன்னு நின்ன வீட்டுச் செடி,
தான் அழகுல மெய்மறந்து பார்க்க
களை அவனைப் பாத்து  கலையாச் சிரிச்சுது.
வாழும் வரை வாழ்ந்து விட்டு போவோம் நாங்க.
நீ எப்படி வாழுவ, உன் கையில என்ன
நெனச்ச இடத்தில் நெனச்ச படி வளருவோம் நாங்க
வளர வளர தெனம் தெனம்  வெட்டுவாங்க உன்ன,
பாத்துப் பாத்து  வளர்ந்தாலும் உரம் உரமாத் தின்னாலும்
பருவக் காத்து வீசரப்ப உரிமை சொல்ல முடியுமா !

Friday, October 29, 2010

விழியும் விழியும் ஒரு நொடி உரச
உன் விழியே ஒரு கணம் பல கதை பேச
கண்ணும் கண்ணும் பார்த்துக் கொண்ட சில நிமிடங்கள்
பல வருடம் வாழ்ந்ததுபோல் உள்ளம் சொல்ல
வார்த்தை எதற்கு பாஷை எதற்கு
தேவையில்லை என் கண்மணி.
என் காதல் சொல்லும் பாஷை மட்டும்
புரிந்துகொள் என் கண்மணி.
அலை கடலில் இறங்கி ஆர்ப்பரித்த ஒருவன்
மழைக்கு ஒதுங்கி மறைவில் நின்றான்
அய்யோ பாவம்!
அன்று என் மேல் நீ விழுந்தாய்,
விழுந்தது நீ மட்டுமல்ல, நானும்தான்
உன் காதல் வலையில்.
அவள் கண்கள் பார்த்ததும் கோபம்
என் மேலேயே எனக்கு
உயிரிருந்தும் உறைந்து சிலை ஆகிறேன்
அந்த ஒரு நொடியில் அதனால்.
சாதி இரண்டொழிய வேறில்லை
என்று சொல்லிக் கொடுத்தார்
வேலுப் பிள்ளை வாத்தியார்.
 
உழைத்து உழைத்து நான் முன்னேறிக் கொண்டிருக்க
இடையில் எழுந்திரிடா சோம்பேறி நாயே
என்றால் என் அன்னை.

Sunday, October 17, 2010

ஒரு நொடியில் உன் விழியில் என் விழிகள் விழ ,
கோடி யுகம் ஆகுதடி அந்தப் பார்வையில் இருந்து நான் மீள,
கண்கள் இமைக்கும் இந்த ஒவ்வொரு நொடியும் ,
கனவு களைந்து தொடங்குதடி மறுபடியும்.
காதல் கூட ஒரு வகை தண்டனை தான்,
என் இதயத்தில் அவள்  ஆயுள் கைதியாக!
அவள்  இதயத்தில் நான் ஆயுள் கைதியாக!