Friday, October 14, 2016

நீயும் நானும்

உன் விழிகள் போதுமே பார்த்துக் கொண்டிருக்க
இனி எங்கே நான்  தேநீர்  பருக
உன் மடி  மேல் என் தலை வைத்து   நீ தலை கோதிக்கொண்டிருக்க
இனிமேல் நான் எங்கு  தூங்க.
மணி நேரம் பல  ஆனாலும் பசி இல்லை தூக்கம்  இல்லை எனக்கு
என்று பொய் தான் சொல்லுவேன் அன்பே
நீ என் அருகில் இருக்கும் இந்த  மணித்  துளிகள் போதும்  அன்பே
இனி நான் சொர்க்கம் போனாலும் இந்த  நேரம்  தான்  இனிமையடி

Wednesday, March 19, 2014




ஏன் ஏன் ஏன் நீ வந்தாய்
 எந்தன் நெஞ்சில் ஒரு காதல் தந்தாய் 
ஏன் ஏன் ஏன் நீ வந்தாய்
ஏ பெண்ணே என் இதயத்தை இடம் மாறச் செய்தாய்
ஏன் ஏன் ஏன் நீ வந்தாய்
எழுத்துக் கூட்டிகூட படிக்கதெரியாத என்னையும் கவிஞனாய் ஆக்கி விட்டாய்


ஒரு நொடி போதும் உன் பார்வை விழும் போதே
என் மூச்சும் தானே கண்ணே அட  நின்றே போச்சே
உன் இமை மூடி மூடித்தான் திறக்கையில
என் ஏக்கம் தான் இப்ப எட்டு ஊருக்கும் கேட்டுருச்சே
அட காதல் என்றால் இது தானா
இல்ல ஹார்மோன்  செய்யும் தகராறா
அட குழம்பித் தவிக்கறேன் ,உளறித் தொலைக்குறேன்
ஒன்னும் புரியல முழிக்கறேன் முதல் முறையா



ஏன் ஏன் ஏன் நீ வந்தாய் 
என் வாழ்வில் துன்பம் தான் 
ஏன் ஏன் ஏன் நீ சென்றாய் 
என் விழி முழுதும் கண்ணீர் தான் 
உனைப் பார்க்காமல் என் கண்கள் தூங்காதே 
ஏக்கம் தான் தாங்காதே என் அன்பே நீ எங்கே நீ எங்கே 

Tuesday, November 5, 2013

அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்
ஆயிரம் முறை  பேசிக்கொண்டார்கள் அப்படியே இருவரும்  அன்று
இன்று இருவர் கையிலும் நோக்கியா
 இனி எங்கே நோக்க

Saturday, February 5, 2011

கவிதையாகக்  காதல் செய்யத் தெரியவில்லை.
என் காதல் ஒரு நாள் கவிதை ஆகும் என்ற நம்பிக்கையில்,
என்றும் சுவாசிக்கிறேன் அந்தக் காதலை.

Tuesday, December 7, 2010

வெட்டி ஓட்ட ஒட்டி வெட்ட
வேலைக்கு ஆயிரம் ருபாய்
வேலைக்கு பேர் மென்பொருள்.

Sunday, December 5, 2010

சிறை

மறக்க  நினைத்தேன் உன்னை 
மறுநொடியே  மறந்து  விட்டேன் 
அந்த  நினைப்பை  மட்டும்