Wednesday, March 19, 2014




ஏன் ஏன் ஏன் நீ வந்தாய்
 எந்தன் நெஞ்சில் ஒரு காதல் தந்தாய் 
ஏன் ஏன் ஏன் நீ வந்தாய்
ஏ பெண்ணே என் இதயத்தை இடம் மாறச் செய்தாய்
ஏன் ஏன் ஏன் நீ வந்தாய்
எழுத்துக் கூட்டிகூட படிக்கதெரியாத என்னையும் கவிஞனாய் ஆக்கி விட்டாய்


ஒரு நொடி போதும் உன் பார்வை விழும் போதே
என் மூச்சும் தானே கண்ணே அட  நின்றே போச்சே
உன் இமை மூடி மூடித்தான் திறக்கையில
என் ஏக்கம் தான் இப்ப எட்டு ஊருக்கும் கேட்டுருச்சே
அட காதல் என்றால் இது தானா
இல்ல ஹார்மோன்  செய்யும் தகராறா
அட குழம்பித் தவிக்கறேன் ,உளறித் தொலைக்குறேன்
ஒன்னும் புரியல முழிக்கறேன் முதல் முறையா



ஏன் ஏன் ஏன் நீ வந்தாய் 
என் வாழ்வில் துன்பம் தான் 
ஏன் ஏன் ஏன் நீ சென்றாய் 
என் விழி முழுதும் கண்ணீர் தான் 
உனைப் பார்க்காமல் என் கண்கள் தூங்காதே 
ஏக்கம் தான் தாங்காதே என் அன்பே நீ எங்கே நீ எங்கே